அரசு பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு

6 months ago 19

தொண்டி, நவ.6: தொண்டி கிழக்கு அரசு பள்ளியில் கழிப்பறை இடியும் நிலையில் உள்ளது குறித்து நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொண்டி கிழக்கு துவக்கப் பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ,மாணவர் படித்து வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி இல்லை. இருக்கும் ஒரு கழிப்பறை கட்டிடமும் இடியும் நிலையில் இருப்பதாக தினகரனில் விரிவான செய்தி வெளியானது.

இதையடுத்து நேற்று வட்டார கல்வி அலுவலர் புல்லாணி தலைமையில் அதிகாரிகள் இடிந்த நிலையில், உள்ள கழிப்பறையை ஆய்வு செய்தனர். உடனடியாக புதிய கழிப்பறை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். வட்டார வளர்சி அலுவலர், சத்துணவு அமைப்பாளர், தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post அரசு பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article