சென்னை: அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்க வில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு தத்துக்கொடுப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கிறோம் என்று பரவும் தகவல் தவறானது என அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.
பின்னர், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், பத்திரிகைகளில் வெளியான செய்தி தவறானது. செய்தியின் உண்மைத்தன்மையை அறியாமலேயே அரசியல் கட்சியினர் கண்டனத்தை பதிவு செய்கின்றனர். 500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தருவது தொடர்பாக வெளியான செய்தியை உறுதிப்படுத்தாமல் கண்டனம் தெரிவித்தோருக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
சிஎஸ்ஆர் நிதி மூலம் மட்டுமே அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டன. எஸ்.எஸ்.ஏ. நிதி வராதபட்சத்தில் திட்டங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஒன்றிய அரசு நிதி தராமல் இருப்பது தமிழ்நாடு அரசுக்கு விடுக்கும் மிரட்டலாகத்தான் பார்க்கிறோம் இவ்வாறு தெரிவித்தார்.
The post அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கிறோம் என்று பரவும் தகவல் கண்டிக்கத்தக்கது: அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.