அரசு பள்ளிகளில் ஆர்டிஓ ஆய்வு அணைக்கட்டு அடுத்த அப்புக்கல்

3 days ago 2

அணைக்கட்டு, நவ.22: அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் அரசு பள்ளிகளில் ஆர்டிஓ ஆய்வு செய்தார். அணைக்கட்டு தாலுகாவில் 2வது நாளாக நேற்று ஒடுக்கத்தூர் பேரூராட்சியில் கலெக்டர் சுப்புலட்சுமி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கள ஆய்வு மேற்கொண்டார். அதைதொடர்ந்து அவரது உத்தரவின் படி ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் அணைக்கட்டு அடுத்த அப்புக்கல்ஊராட்சியில் ஆய்வு செய்தார். அதன்படி அப்புக்கல், அருணகிரியூர் கிராமங்களிலும் இயங்கும் அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு சென்று முதல்வரின் காலை உணவு திட்டம் மற்றும் பள்ளியின் செயல்பாடுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

அப்போது சத்துணவு கூடத்திலேயே காலை உணவு தயாரிக்க பயன்படுத்தி வருவது தெரியவந்தது. அதுபோல் இல்லாமல் காலை உணவு திட்டத்தில் உணவு சமைப்பதற்கு தனி அறை பயன்படுத்த வேண்டும், காலை உணவு திட்டம் சார்ந்த கணக்கு, வழக்கு பதிவுகளை சரியாக பராமரிக்க வேண்டும், சத்துணக்கூடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதில் எரியாமல் உள்ள மின்விளக்கு உள்ளிட்டவைகளை சரி செய்து பயன்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என ஆசிரியர்களிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது அணைக்கட்டு கிராம நிர்வாக அலுவலர் சங்கர் தயாளன், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post அரசு பள்ளிகளில் ஆர்டிஓ ஆய்வு அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article