“அரசு பள்ளிகளின் இணைய வசதி கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளிடம் திணிக்காதீர்!” - ராமதாஸ்

5 hours ago 3

சென்னை: “அரசு பள்ளிகளின் இணைய வசதி கட்டணத்தை உள்ளாட்சிகள் செலுத்துவது அரசின் தோல்வி” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், இணையவசதி கட்டணத்தை தமிழக அரசு தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர உள்ளாட்சி அமைப்புகள் மீது திணிக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு இணைய வசதி ஏற்படுத்துவதற்காக கட்டணங்களை உள்ளாட்சி அமைப்புகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகள் போதிய வருவாயும், நிதியும் இல்லாமல் தடுமாறி வரும் நிலையில், இணையக் கட்டணத்தையும் செலுத்த வேண்டிய சுமையை அவற்றின் மீது சுமத்துவது கண்டிக்கத்தக்கது.

Read Entire Article