அரசு பள்ளி மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

3 weeks ago 6

செங்கல்பட்டு: அரசு பள்ளி மாணவ மாணவிகளுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை மூலம் நேற்று காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் 20 பேருடன் உரையாடினார். இதில், மாணவிகள் தங்களின் எதிர்கால இலக்கு அடைவதற்கு எடுக்கும் முயற்சிகள் எதிர் கொள்ளும் தடைகள் குறித்து வெகு இயல்பாக கலெக்டரிடம் உரையாடி மகிழ்ந்தனர்.

அப்போது, மாவட்ட கலெக்டர் மாணவ, மாணவியருடன் உரையாடி ஆர்வத்துடன் அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து உற்சாக மூட்டினார். இதில் அரசு நடுநிலை, உயர்நிலை மேல்நிலைப் பள்ளியிலும் பயிலும் 19 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முதன்மைக் கல்வி அலுவலர் கற்பகம், நேர்முக உதவியாளர் உதயகுமார் உடனிருந்தனர்.

The post அரசு பள்ளி மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article