“அரசு பணி தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற 400 பேரை தகுதியில்லை என்பது நியாயமில்லை” - பாதிக்கப்பட்ட மருத்துவர்கள்

3 hours ago 2

சென்னை: அரசு மருத்துவர் பணிக்கு தேர்வெழுதி, நல்ல மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 400 மருத்துவர்களை தகுதியில்லாதவர்கள் எனக் கூறுவது நியாயமில்லை என்று பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, 2,553 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி 5-ம் தேதி நடந்த தேர்வில், எம்பிபிஎஸ் படித்து முடித்த 24 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்றனர். 14,855 மருத்துவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதற்கிடையில், கூடுதலாக 89 காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரிக்கப்பட்டது.

Read Entire Article