அரசு நிலங்களில் மண் திருட்டு

6 months ago 22

பாப்பாரப்பட்டி, நவ.11: பென்னாகரம் பகுதிகளில் அனுமதியின்றி இரவு நேரங்களில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து பொக்லைன் மூலம் மண் அள்ளப்பட்டு டிப்பர் லாரிகள் மூலம் தனியார் விளை நிலங்களில் கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பருவ மழையினை பொறுத்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான பகுதிகள் சிறு சிறு அளவிலான மலைகள், குன்றுகள் நிறைந்தவையாக உள்ளது.

பருவதன அள்ளி, தாசம்பட்டி, ஏரியூர், நீர்குந்தி மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அரசு நிலங்களில் இரவு நேரங்களில் அனுமதியின்றி மண் அள்ளப்பட்டு, கனரக வாகனத்தின் மூலம் பென்னாகரத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் விளை நிலங்களில் கொட்டப்பட்டு வருகிறது. மண் திருட்டில் ஈடுபடும் வாகனங்கள் இரவு நேரத்தில் வேகமாக இயக்கப்படுவதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரசு நிலங்களில் மண் திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article