அரசு, தனியார் கல்லூரிகளில் இடைநின்ற மாணவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 16 பேர் உயர்கல்வியை தொடர ஏற்பாடு

1 month ago 4

 

விருதுநகர், டிச.11: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாணவர்களுக்கான குறைதீர் கூட்டத்தில் 16 மாணவர்கள் உயர்கல்வி தொடர ஏற்பாடு செய்யப்பட்டது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிக்கு சென்று இடைநின்ற மாணவர்களுக்கான சிறப்புகுறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் இருந்தும் 26 மாணவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு, பரிசீலனை செய்து அவற்றில் 16 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டது. கூட்டத்தில் குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், சரியான வழிகாட்டுதலின்மை, பாடப்பிரிவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடர முடியாமல் இருப்பதாக மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.

அவர்களிடம் அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் திட்டங்கள், சலுகைகள், ஊக்கதொகைகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்ற பாடப்பிரிவு துறைகள் தேர்வு செய்வது உள்ளிட்ட தீர்வுகள் எடுத்துரைத்து கல்வியை தொடர ஆலோசனைகள், அறிவுரைகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் துணைஆட்சியர் காளிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா, கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு, தனியார் கல்லூரிகளில் இடைநின்ற மாணவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 16 பேர் உயர்கல்வியை தொடர ஏற்பாடு appeared first on Dinakaran.

Read Entire Article