‘‘அரசு ஊழியர்கள், பொதுமக்களின் போராட்டக்களமாக தமிழகம் மாறியுள்ளது’’: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

3 months ago 14

மதுரை; ‘‘அரசு ஊழியர்கள், பொதுமக்களின் போராட்டக்களமாக தமிழகம் மாறியுள்ளது,’’ என்று சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திரும்பிய திசை எங்கும் திமுக அரசின் மீது மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். மக்கள், அரசு ஊழியர்கள், அங்கன் வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், மக்கள் நல்வாழ்வு பணியாளர்கள், வருவாய்த்துறை பணியாளர்கள் என அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், தமிழகம் இன்றைக்கு போராட்ட களமாக மாறி உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழையில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை, முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்திருக்கிறதா என்றால் இல்லை.

Read Entire Article