அரசு ஊழியர்களுக்கு திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்வு: அரசாணை வெளியீடு

11 hours ago 2

சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணம் வழங்கப்படுகிறது. பெண் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் ஆண்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இதை பல மடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்ட அரசாணையில், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அவர்களின் இல்லத் திருமணத்திற்கான முன்பணத்தை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Read Entire Article