சென்னை: அரசு ஊழியர் நலனுக்கான முதல்வரின் அறிவிப்புகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேரவை விதி எண் 110-ன் கீழ், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் 9 அறிவிப்புகள் வெளியிட்டு இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. பல்லாண்டுகளாக போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இவை நம்பிக்கையூட்டும் அறிவிப்புகளாகும்.
கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட விடுப்பு நாட்களை 15 நாட்கள் வரை சரண்டர் செய்து 1.10.2025 முதல் பணப்பயன் பெற்றுக் கொள்ள வழிவகை, 1-1-2025 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பது போல தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோருக்கும் 2 சதவிகித அகவிலைப்படி உயர்வு, பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு 1-7-2024 முதல் ஓராண்டாக உயர்வு, மகப்பேறு விடுப்பு காலமும் தகுதிகாண் பருவம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுதல் உள்ளிட்ட முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதாகும்.
The post அரசு ஊழியர் நலனுக்கான முதல்வரின் அறிவிப்புகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு appeared first on Dinakaran.