சென்னை: தமிழகம் முழுவதும் புதிதாக நியமிக்கப்படவுள்ள 2,642 அரசு உதவி மருத்துவர்களுக்கான தகுதி பட்டியலில் இருந்து 400 மருத்துவர்களை நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி நியமனம் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 2,642 அரசு உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ தேர்வு வாரியம் கடந்த ஜன.5 அன்று தேர்வு நடத்தியது.
அதன்படி தேர்வு முடிந்து தகுதியான மருத்துவர்களின் தகுதிப் பட்டியலை தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்பிறகு இதில் 400 பேர் கடந்த 2024ஜூலை 15-க்கு முன்பாக மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யவில்லை எனக்கூறி தகுதிப்பட்டியலில் இருந்து அவர்களின் பெயர்களை தேர்வு வாரியம் நீக்கியது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் பிரியதர்ஷினி, சாய் கணேஷ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.