அரசியல் லாபத்திற்காக ஆயுஷ்மான் பாரத் திட்டம் புறக்கணிப்பு: டெல்லி, மேற்கு வங்காள அரசுகளை சாடிய பிரதமர் மோடி

2 months ago 12

புதுடெல்லி,

நாட்டில் 9-வது ஆயுர்வேத தினம் மற்றும் மருத்துவ கடவுளான தன்வந்தரியின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஆகியவற்றை முன்னிட்டு ரூ.12,850 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர், இந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது, 70 மற்றும் அதற்கு மேல் வயதுடைய அனைவரையும், ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வருவேன் என வாக்குறுத்தி அளித்திருந்தேன். இந்த உத்தரவாதம் இன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது என்று கூறினார்.

இதன்படி, 70 வயதுடைய மக்கள் அனைவரும், மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறுவார்கள். அவர்களுக்கு ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை வழங்கப்படும். தொடர்ந்து அவர் பேசும்போது, எனினும், டெல்லி மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள 70 வயதுடைய மக்களுக்கு இந்த சேவையை வழங்க முடியாததற்காக அவர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

உங்களுடைய வலியையும், பாதிப்புகளையும் பற்றி நான் அறிவேன். ஆனால், உங்களுக்கு என்னால் உதவ இயலாது. ஏனெனில், இந்த மாநிலங்களின் அரசுகள், அரசியல் லாபத்திற்காக இந்த திட்டத்தினை அமல்படுத்தவில்லை என்று வேதனை தெரிவித்து உள்ளார்.

Read Entire Article