புதுடெல்லி: டெல்லியில் வரும் 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பில், ‘‘சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் படங்கள், வீடியோ மற்றும் ஆடியோ கன்டென்டுகள் அதிகரித்து வருகின்றன. அரசியல் பிரசாரத்திலும் ஏஐ தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட கன்டென்டுகள், படங்கள், வீடியோக்கள் வாக்காளர்களின் கருத்து மற்றும் நம்பிக்கையை பாதிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.
எனவே, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பிரசார ங்கள் மீது ‘இவை ஏஐ மூலம் உருவாக்கியவை என்றோ, டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டவை என்றோ அரசியல் கட்சிகள் பதிவிட வேண்டும். மேலும், அந்த பிரசாரப் பொருட்களில் பொறுப்பு துறப்பு வாசகங்களும் இடம் பெற வேண்டும்’’என்று அறிவுறுத்தி உள்ளது.
The post அரசியல் கட்சிகள் கவனத்திற்கு… ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட தகவல்களை குறிப்பிடுங்கள்: தேர்தல் ஆணையம் அறிவுரை appeared first on Dinakaran.