அரசியலமைப்பு நாள் 75வது ஆண்டு தினக் கொண்டாட்டம்: எதிர்க்கட்சி தலைவர்கள் பெயர் இடம்பெறாததால் சர்ச்சை

2 months ago 13

டெல்லி: அரசியலமைப்பு நாள் கொண்டாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பேச அனுமதிக்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் பெயரை சேர்க்க வேண்டும் என மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்திய அரசியலைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75வது ஆண்டு விழா நாளை நடைபெறுகிறது. இதையொட்டி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் உரையாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் நாடாளுமன்ற இரு அவைகளின் எதிர்க்கட்சி தலைவர்களின் பெயர்கள் இடம் பெறாததற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாண்பை காக்கும் வகையில் இரு அவைகளின் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எழுதியுள்ள கடிதத்தில் சபாநாயகர் விரைவாக நல்ல முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

The post அரசியலமைப்பு நாள் 75வது ஆண்டு தினக் கொண்டாட்டம்: எதிர்க்கட்சி தலைவர்கள் பெயர் இடம்பெறாததால் சர்ச்சை appeared first on Dinakaran.

Read Entire Article