அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்ற முதியவர் கைது

3 months ago 13

திருச்சி, பிப்.10: புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, மேலகல்கண்டார் கோட்டை அருகே பொன்மலை போலீசார் பிப்.8ம் தேதி ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு நின்றவரிடம் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அவர் தென்னூர் ஆழ்வார்தொப்பை சேர்ந்த ஜமால் மொய்தீன் (56) என்பதும், அரசால் தடை விதிக்கப்பட்ட ரூ.16,000 மதிப்புள்ள சுமார் 9 கிலோ 321 கிராம் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து அவரை பொன்மலை போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

The post அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்ற முதியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article