பெரம்பலூர், பிப்.25: பெரம்பலூர் அரசமரத்து விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகத்தையொட்டி சிறப்புஅபிஷேகம் நடைபெற்றது.பெரம்பலூர் நகரத்தின் தென்புறம் உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் உட்புறம் அமைந்துள்ள அரசமரத்து விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததையொட்டி நேற்று மண்டலாபிஷேகம் நடைபெற்றது இதையடுத்து கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, கடம் புறபாடு நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் மகாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை முல்லை சிவாச்சாரியார் மற்றும் ராமர் பூசாரியார் செய்திருந்தனர். நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், அறங்காவலர் தர்மராஜன், ஜெயபால், பாரதி மற்றும் பெரம்பலூர், அரணாரை, துறைமங்கலம், விளாமுத்தூர், நெடுவாசல், சிறுவாச்சூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
The post அரசமரத்து விநாயகர் கோவில் மண்டலாபிஷேகம் appeared first on Dinakaran.