அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

4 months ago 15

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் பகுதியில், காட்பாடி-சென்னை செல்லும் ரயில் மார்க்கத்தில் நேற்று அதிகாலை 4.40 மணியளவில் சரக்கு ரயில் வந்தது. சிக்னல் கிடைக்காததால் டிரைவர் ரயிலை நிறுத்தினார். உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சென்று ஆய்வு செய்தபோது, தண்டவாளம் பகுதியில் பாயிண்ட் பெயிலியர் மற்றும் சிக்னல் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. அதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் சென்னை செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை-சேரன் எக்ஸ்பிரஸ், காவேரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பலர் மின்சார ரயில்களில் ஏறி சென்றனர். அதிகாலை 5.15 மணியளவில் சிக்னல் மற்றும் பாயிண்ட் கோளாறை ஊழியர்கள் சரி செய்தனர். தொடர்ந்து, சரக்கு ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சுமார் 1 மணி நேர காலதாமதத்திற்கு பின் இயக்கப்பட்டன.

The post அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article