அரக்கோணம் அருகே எம்.ஆர்.எப் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

3 hours ago 2

அரக்கோணம் அருகே எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையானது செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றக்கூடிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக நியமிக்கவும், ஊதிய உயர்வு வழங்க கோரியும் கடந்த மாதம் 28-ம் தேதி பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஆலை நிர்வாகத்தினர் உரிய பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்தனர்.

இருப்பினும் ஆலை நிவாகத்தினர் எந்த தகவலும் தெரிவிக்காத நிலையில், பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஆலை நிர்வாகம் ஈடுபட்டதை தொடர்ந்து இன்று காலை பணிக்கு செல்ல இருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்.

காவல்துறையினர் தொழிற்சாலை முன்பாக போராட்டம் நடத்தக்கூடாது என தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தொழிற்சாலையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள மைதானத்தில் அமர்ந்து கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 6 மணி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

The post அரக்கோணம் அருகே எம்.ஆர்.எப் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் appeared first on Dinakaran.

Read Entire Article