ராஜாக்கமங்கலம், ஜன. 19 : அய்யா வைகுண்டர் பாரம்பரியம் பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட சிறப்பு கூட்டம் ஈத்தாமொழியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எஸ்.எஸ். சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் என்.எஸ்.கண்ணன் பேசினார். மாவட்ட துணைத்தலைவர் முருகேசன், துணை செயலாளர் கவுசல்யா மற்றும் செல்வன், கண்ணன், லெட்சுமி, ராஜ்குமார், அஸ்வின், மிக்கேல் நாயகி, ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அய்யா வைகுண்டரின் 193 வது அவதார தின விழாவை முன்னிட்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதி கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் பேச்சு போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், பாட்டு போட்டிகள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
The post அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த முடிவு appeared first on Dinakaran.