
அயோத்தி,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 22-ந் தேதி ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. முதல்கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட கும்பாபிஷேக விழா, நடந்து முடிந்தது.
தொடர்ந்து 2-ம் கட்ட பணிகளில் இதர சன்னதி கட்டுமானங்கள் உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தன. தற்போது இந்த கோவில் கோபுரங்களுக்கு தங்க முலாம் பூசும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக நிபுணர் குழுவினர் அயோத்தி வந்துள்ளனர்.
"நிபுணர்கள் மேற்பார்வையில் முலாம்பூசும் பணி தொடங்கி உள்ளது. 3 வாரங்களில் பணிகள் நிறைவடையும். கோவிலுக்கு ராமர், லட்சுமணன் மற்றும் சீதா சிலைகள் ஏற்கனவே வந்துவிட்டன. கோவிலின் முதல் மாடியில் அவை நிறுவப்படும்.
ஜூன் 5-ந்தேதி புதிய ராம் தர்பாரில் கும்பாபிஷேகம் நடைபெறும். கோவில் வளாகத்திற்குள் மீதமுள்ள கட்டுமானப் பணிகள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும்" என்று கோவில் கட்டுமான குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா நேற்று கூறி உள்ளார்.