அயோத்தி,
உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு முதல் நாளான இன்று பக்தர்களின் வருகை அதிகரித்து இருந்தது. இதுபற்றி ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை வெளியிட்டு உள்ள செய்தியில், பக்தர்கள் இன்று காலை 7 மணி முதல் தொடர்ச்சியாக வருகை தந்து கடவுள் ஸ்ரீராமரை தெய்வீக தரிசனம் செய்து வருகின்றனர். 5 வரிசைகளில் தடையின்றி பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
இதுவரை 2 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என மதிப்பிடப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளது. ராமர் கோவிலுக்கு வருவதற்கு இரவு 9 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஆண்டின் கடைசி நாளில் நடந்த ஆரத்தியில் பங்கேற்க நேற்று (டிசம்பர் 31) திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர். புது வருட பிறப்பை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கோவில்களுக்கும், கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் மற்றும் மசூதிகளுக்கும் திரண்டு வந்து பிரார்த்தனை செய்தனர்.