அம்மை நோயால் பாதித்த கால்நடைகளை தனியாக பராமரிக்க வேண்டும்: கால்நடைத்துறை அதிகாரிகள் ஆலோசனை

1 day ago 4

 

வலங்கைமான் ஜூலை 6: அம்மை நோயால் பாதித்த கால்நடைகளை தனியாக பராமரிக்க வேண்டுமென கால்நடைத்துறையி அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை அடுத்து கால்நடை வளர்ப்போருக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடுகிறது. அம்மை நோய் என்பது வைரஸ் மூல தொற்றக்கூடிய நோயாகும். இது ஒரு டி.என்.ஏ வைரஸாகும். இது ஹெர்பஸ் வைரஸ் என்ற குழுவைச்சேர்ந்தது. முக்கியமாக ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் இதனால் பாதிப்படையக்கூடும். இந்த வைரஸ் உடலில் ஆங்காங்கே சிவப்பு நிற கொப்புளங்களை தோற்றுவித்து நமைச்சல், எரிச்சலை உண்டாக்கும். இந்த கொப்புளங்களில் நீர்தேங்கி பார்ப்பதற்கு கண்ணாடியைப்போல் காட்சியளிக்கும். அம்மை போட்ட கொஞ்ச நாட்களில் இந்த கொப்புளங்களில் இருந்து நீர் கசியத்தொடங்கி விடும். கொப்புளங்கள் முழுவதுமாக ஆறின பிறகு அந்த இடங்களில் வடுக்களை உண்டாக்கிறது. அம்மை நோய் கால்நடைகளில் மாடு, பன்றி, ஆடு, குதிரை, ஒட்டகம், குரங்கு போன்ற பாலூட்டிகளையும் தாக்கக்கூடியது. இந்த வைரஸ் கால்நடைகளை தாக்கி அம்மை நோயை ஏற்படுத்துகிறது.

The post அம்மை நோயால் பாதித்த கால்நடைகளை தனியாக பராமரிக்க வேண்டும்: கால்நடைத்துறை அதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.

Read Entire Article