அமெரிக்காவைச் சேர்ந்த கிரிஸ்டல் நிக்கோல் என்ற பெண், தனது தாயாரின் நீண்ட நாள் கனவான பாரிஸ் பயணத்தை பூர்த்தி செய்து அவரின் மனம்விட்டு மகிழ்ந்த தருணத்தை வீடியோவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பாரிஸ் நகருக்குள் காரில் பயணிக்கும் போது, தாயார் ஜன்னலில் வெளியே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், பாரில் ஈஃபில் கோபுரம் திடீரென கடக்கும் போது, அவரது முகத்தில் மகிழ்ச்சி, வியப்பு, மற்றும் நெகிழ்ச்சி என ஒரே சமயத்தில் அவ்வளவு உணர்வுகள்.. ‘‘புத்தகத்தில் மட்டுமே படித்து வியந்த ஈஃபிள் கோபுரம். ஆனால் இப்போது என் கண்கள் அதை நேரில் பார்க்கின்றன. அதன் அழகைப் பாருங்கள்!” என வியந்தபடி அவரது போனிலும் அவர் படம் பிடிப்பதை நிக்கோல் பதிவு செய்திருக்கிறார்.
இந்த அழகான தருணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கிரிஸ்டல் ‘‘ஐஃபெல் கோபுரத்துக்குச் செல்லவேண்டுமென்ற ஆசையுடன் வாழ்ந்த என் அம்மா, அதே டவர் நோக்கி இருக்கும் ஹோட்டல் அறையில்தான் தங்கப்போகிறார் என்பது இப்போதும் தெரியாது” என்று பதிவிட்டிருந்தார். மேலும், ‘‘என் அம்மாவை ஒரு குழந்தை போல் பார்க்கிறேன்.” என மகிழ்வை பகிர்ந்திருக்கிறார் கிரிஸ்டல்.இந்த வீடியோ தற்போது இரண்டுக்கும் மேற்பட்ட மில்லியன் பார்வைகளைத் தாண்டி அனைவரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் கிரிஸ்டலின் செயலை பாராட்டி, தங்கள் அனுபவங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துள்ளனர். ஒருவர், ‘‘இது தன்னை அழ வைத்தது. மிகவும் அழகான தருணம்” என்று எழுதியிருந்தார். மற்றொருவர், ‘‘இது என் இதயத்தை உருக்கிவிட்டது. நீங்கள் நேசிக்கும் ஒருவரின் கனவுகளை நனவாக்கும்போது அது உலகத்தில் மிக அழகான உணர்வு” என்று
பதிவிட்டிருந்தார்.வரவிருக்கும் அன்னையர் தின சிறப்பாக தனது அம்மாவுக்கு இப்படி ஒரு பரிசை கொடுத்திருக்கிறார் கிறிஸ்டல் நிக்கோல்.
The post அம்மாவின் கனவு! appeared first on Dinakaran.