அம்பேத்கரின் பெயரை பாஜக அழிக்க முயற்சி: உத்தவ் தாக்கரே தாக்கு

4 months ago 18

மும்பை,

அம்பேத்கர் பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசிய கருத்து தொடர்பாக உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

அம்பேத்கர் பற்றிய அமித்ஷாவின் கருத்துகள் பாஜகவின் ஆணவத்தை காட்டுகிறது. மேலும் அதன் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. அம்பேத்கர் குறித்து அமித்ஷா கூறிய கருத்துக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும்.

அம்பேத்கரின் பெயரை பாஜக அழிக்க முயற்சி செய்கிறது. ஆனால் அது நிச்சயம் நடக்காது. அப்படி முயற்சி செய்தால் அந்த கட்சியே அழிந்துவிடும். பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சி, ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சி மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் அம்பேத்கர் பற்றி அமித்ஷாவின் கருத்துகளுடன் உடன்படுகிறார்களா?.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு இல்லாமல் டாக்டர் அம்பேத்கர் பற்றி கருத்து கூற அமித்ஷா துணிந்திருக்க மாட்டார். அல்லது அமித்ஷாவின் மூலமாக ஆர்.எஸ்.எஸ். தான் இப்படி பேசுகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பாஜகவின் இந்துத்வா வஞ்சகமானது. பிரித்து ஆட்சி செய்வதே அவர்களது இந்துத்வா ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article