அரியலூர், டிச. 18: அரியலூர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட அம்பாபூர் முதல் உல்லியக்குடி சாலையில் அம்பாபூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடுமவங்கள் உள்ளன. இவர்கள் விவசாயம் மற்றும் விவசாய கூலித் தொழில்கள் செய்துவருகின்றனர். இங்கு சமீபத்தில் பெய்த கனமழையினால் சாலையின் ஒருபகுதி உடைப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.
தகவலறிந்த நெடுஞ்சாலை துறையினர் விரைந்து வந்தனர். உடைப்பட்ட இடத்தில் சவுக்கு கம்பிகளை கொண்டு அரணமைத்தது. அதில் மணல் மூட்டைகள் அடுக்கினர். தண்ணீர்விரைந்து செல்லும் பணியினை துரிதமாக செய்து முடித்துள்ளனர். மேற்கண்ட பணியினை கோட்டப்பொறியாளர் அறிவுறுத்தலின்படி சாலை சீரமைப்பினை உதவிக்கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உடனிருந்து பணியினை செய்து முடித்தனர்.
The post அம்பாபூர் கிராமத்தில் உல்லியக்குடி சாலை சீரமைப்பு appeared first on Dinakaran.