அம்பத்தூர் பால்பண்ணை மற்றும் அம்பத்தூர் பால் உபப் பொருட்கள் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் ஆர். எஸ் .ராஜகண்ணப்பன்!

3 months ago 22

சென்னை: புதிதாக பால் வளத்துறை மற்றும் கதர்த் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பால் வளத்துறை மற்றும் கதர்த் துறை அமைச்சர் ஆர். எஸ் .ராஜகண்ணப்பன் அவர்கள் இன்று (3.10.2024) அம்பத்தூர் பால்பண்ணை மற்றும் பால் உபப் பொருட்கள் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார். அம்பத்தூர் பால்பண்ணையில் தினசரி சுமார் 4 இலட்சத்து 60 ஆயிரம் லிட்டர் பால் தயாரிக்கப்பட்டு அம்பத்தூர், அண்ணாநகர், தி.நகர், அயனாவரம், ஆவடி, திருவல்லிக்கேணி போன்ற பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், பால் வளத்துறை மற்றும் கதர்த் துறை அமைச்சர் அவர்கள் அம்பத்தூர் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டு பால் பாக்கெட் தயாரிப்பு மற்றும் இயந்திரங்களை பாதுகாப்பான முறையில் கையாளுவது மற்றும் பால் பண்ணையை தூய்மையாக வைத்துக்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

தொடர்ந்து, பால் வளத்துறை மற்றும் கதர்த் துறை அமைச்சர் அவர்கள் அம்பத்தூர் பால் பண்ணை, பால் உபப் பொருட்கள் பண்ணையில் உள்ள உபப் பொருட்கள் தயாரிப்பு பிரிவை ஆய்வு செய்து பால் உற்பத்தி மற்றும் பால் உபப் பொருட்களான இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் வகைகள் மற்றும் இதர உபப் பொருட்களின் தயாரிப்பு முறைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வரக்கூடிய பண்டிகை காலங்களான ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் தேவைப்படும் இனிப்புகள் குறித்து அதிகாரிகளோடு ஆலோசித்தார்கள். எதிர்வரும் பண்டிகை காலங்களில். பால் மற்றும் பால் உபப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்கள். மேலும் பால் மற்றும் பால் உபப் பொருட்கள் தரமாகவும் பொதுமக்களுக்கு எந்த தங்கு தடையும் இன்றி பால் மற்றும் பால் உபப் பொருட்கள் விற்பனை செய்து வருவாயை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பொது மக்களுக்கு எவ்வித தடையும் இன்றி ஆவின்பால் விநியோகம் செய்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்கள். ஆவின் நிறுவனத்தின் வருவாயை இரட்டிப்பாக்கவும், பால் கொள்முதலை 50 இலட்சம் லிட்டர் என்று அதிகரிக்கவும் அந்த இலக்கை எய்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள். பால் வளத்துறை மற்றும் கதர்த் துறை அமைச்சர் ஆர். எஸ் .ராஜகண்ணப்பன் அவர்கள், பால்வளத்துறை இயக்குநர் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநர் டாக்டர்.சு. வினீத் இ.ஆ.ப., அவர்கள், மற்றும் ஆவின் இணை நிருவாக இயக்குநர். க. பொற்கொடி இ.ஆ.ப., அவர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

 

The post அம்பத்தூர் பால்பண்ணை மற்றும் அம்பத்தூர் பால் உபப் பொருட்கள் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் ஆர். எஸ் .ராஜகண்ணப்பன்! appeared first on Dinakaran.

Read Entire Article