
சென்னை,
தமிழக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு பிறகு மூப்பு நிலை அடிப்படையிலான அமைச்சர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 பேர் உள்ளனர்.
அந்த வரிசை விவரம் வருமாறு:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி.
கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கைத்தறித் துறை அமைச்சர் காந்தி, மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், இந்துசமய அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு.
உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.