
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்ய பதிவுத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் பொன்முடியின் கருத்துக்கள் பெண்கள் மற்றும் சைவ, வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்றும் ஆபாசம் தவிர்த்து இரு சமயத்தினரையும் புண்படுத்தியுள்ளது எனவும் அமைச்சர் பொன்முடி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.