சென்னையில் ஹைடெக் சிட்டி வெகு விரைவில் அமையும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை, சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு மாதரவம் சுதர்சனம்(திமுக) பேசியதாவது:
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பேரவையில் சென்னையில் ஹைடெக் சிட்டி உருவாக்கப்படும் என்று ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது மாதவரத்தில் உருவாக்கப்பட வேண்டும். முதல்வர், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.7,000 கோடிக்கு மேல் நிதி செலவு செய்து வருகிறார்கள். தற்போது வடசென்னை மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். பல திட்டங்கள் வடசென்னைக்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
ஹைடெக் சிட்டி அங்கு அமைந்தால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏழை மாணவர்கள், இளைஞர்கள் இருக்கின்ற அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டால், அவர்களை ஊக்குவிப்பதாக அமையும். அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா: முதல்வரின் இந்த நல்லாட்சியில் தான் வடசென்னை, பட்டாபிராமிற்கு என தனியே ஒரு டைடல் பார்க் வழங்கப்பட்டு, அங்கு ஒரு மிகப் பெரிய தகவல் தொழில் நுட்ப புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார். அதேபோன்று உறுப்பினர் சொன்ன ஹைடெக் சிட்டி நிச்சயமாக வெகுவிரைவில் வரும். நிதித்துறையிடம் சென்றிருக்கிறது. நிச்சயமாக அமைக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
The post அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் சென்னையில் ஹைடெக் சிட்டி வெகு விரைவில் அமையும் appeared first on Dinakaran.