அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் 100 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

1 month ago 12

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் 2202 பேர் சேர்க்கப்பட்ட நிலையில் முதல் கட்டமாக 100 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்குமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் 47 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு தொடர்ந்த வழக்கு, சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயவேல் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்களுக்கு வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப் பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன. கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக 2,202 பேர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், நூறு பேர் வீதம் குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்படும் எனவும் நகல்கள் வழங்கி முடித்த பிறகு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்த நீதிபதி ஜெயவேல், வழக்கின் விசாரணையை அக்டோபர் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

 

The post அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் 100 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article