அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி

7 months ago 22

சென்னை,

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்னைகள் அவருக்கு இருந்ததால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் கே.என்.நேரு எடுத்து வந்த நிலையில், அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் கே.என்.நேரு, சிகிச்சை முடிந்து தன்னுடைய வழக்கமான பணிகளுக்கு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Read Entire Article