வாஷிங்டன்: அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரகத்தை சேர்ந்த 2 ஊழியர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேல் நாட்டு தூதரகம் அமைந்துள்ளது. இங்கு திடீரனெ இன்று பயங்கரவாதி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இஸ்ரேல் தூதரகத்தை சேர்ந்த 2 ஊழியர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதுபற்றிய விபரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘துப்பாக்கி சூட்டில் ஒரு ஆண், ஒரு பெண் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்த போது, ‘பாலிஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும்’ கோஷம் எழுப்பினார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது’ என்றனர். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதர் டேனி டானன் கூறுகையில், ‘யூத சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பது எல்லை மீறியுள்ளது. இந்த மோசமான குற்றவாளியை நாங்கள் நீதியின் முன் நிறுத்துவோம்’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
The post அமெரிக்காவில் பயங்கரம்: 2 இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.