அமெரிக்காவில் இந்திய மாணவி கார் விபத்தில் பலி

6 months ago 20

வாஷிங்டன்,

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கணேஷ் - ரமாதேவி ஆகியோரின் மகள் நாக ஸ்ரீ வந்தனா பரிமளா (வயது 26). இவர், கடந்த 2022ம் ஆண்டு உயர் படிப்பிற்காக அமெரிக்காவில் டென்னசி மாகாணத்தின் மெம்பிஸ் நகரில் உள்ள பல்கலையில் படிக்க சென்றார்.

பரிமளா, அடுத்த ஆண்டு தன் படிப்பை நிறைவு செய்தபின் அங்குள்ள நிறுவனத்தில் பணியாற்ற திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில், பரிமளா நேற்று முன்தினம், தன் நண்பர்களுடன் காரில் அருகில் உள்ள பகுதிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், வேகமாக சென்று மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில், பரிமளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவருடன் சென்ற பவன் மற்றும் நிகித் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் மீட்புக்குழுவினர் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் இந்திய மாணவி கார் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article