அமெரிக்காவின் மிக முக்கிய வியூக கூட்டாளி இந்தியா: வெள்ளை மாளிகை அறிவிப்பு

4 hours ago 1

வாஷிங்டன்: இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக, அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவுடனான உறவுகளுக்கு அமெரிக்கா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த பெரிய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. சமீபத்தில், இந்தியாவுடனான ஒப்பந்தம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்தது, எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அதன் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், ‘ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா மிக முக்கிய வியூக கூட்டாளியாகத் திகழ்கிறது. பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் மிக நல்லுறவைப் பேணி வருகிறார்; அது மேலும் தொடரும். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து, அதிபர் டிரம்ப் கடந்த வாரம் கூறியது உண்மைதான். இதுகுறித்து வர்த்தகத் துறை செயலாளரிடம் பேசினேன். அவர்கள் ஒப்பந்தங்களை இறுதி செய்து வருகின்றனர். இதுகுறித்த அறிவிப்பை அதிபரிடமிருந்து மிக விரைவில் வரும்’ என்றார். ஒப்பந்தத்திற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை அவர் அறிவிக்கவில்லை என்றாலும், திரைமறைவுப் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதை அவரது கருத்துக்கள் உறுதிசெய்துள்ளன.

The post அமெரிக்காவின் மிக முக்கிய வியூக கூட்டாளி இந்தியா: வெள்ளை மாளிகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article