அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை புரட்டிப்போட்ட 'ஹெலன்' சூறாவளி.. வெள்ள நீர் புகுந்த கராஜில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார கார் தீப்பற்றி எரிந்தது

3 months ago 26
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை தாக்கிய ஹெலன் சூறாவளியால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில், வெள்ள நீர் புகுந்த காரேஜில் நிறுத்தப்பட்டிருந்த டெஸ்லா மின்சார கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. காருக்கடியில் ஏற்பட்ட நெருப்பு, ஒரு நிமிடத்துக்குள் முழு காரையும் கபளீகரம் செய்தது. காரின் லித்தியம் பேட்டரி மீது உப்பு தண்ணீர் படும்போது அயனிகளுக்கு இடையே ஏற்படும் ரசாயன மாறுதலால் தீ பற்றியிருக்கலாம் என தெரிவிக்கும் அதிகாரிகள், வெள்ளநீர் வடிந்த பிறகும், உப்பு துகள்கள், பேட்டரி மீது பட்டு ஷார்ட் சர்க்யூட் ஆக வாய்ப்புள்ளதால், உடனடியாக பேட்டரியை சார்ஜ் செய்யவோ, மின்சார காரை ஸ்டார்ட் செய்யவோ கூடாது என எச்சரித்துள்ளனர்.
Read Entire Article