டெக்சாஸ்: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் 4மாதங்களில் பெய்யவேண்டும் மலை 6 மணி நேரங்கள் கொட்டியதால் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். டெக்ஸாஸின் தெற்குப்பகுதியில் அமைத்துள்ள சான் ஆன்டோனியோவில் சுமார் 30 சென்டி மீட்டர் கொட்டிய கனமழையால் கெர்னி கவுண்டியில் பாயும் ஆற்றில் கரை புரள்கிறது. கடும் வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான இடைகளில் இருந்த வீடுகள், வாகனங்கள் நீரில் மூழ்கின.
இதனால் கெர்வி கோட்டையின் ஆற்றை ஒட்டி வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி தத்தளிப்பவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோடைகால முகாமில் தங்கியிருத்த 20 சிறுமிகள் உட்பட பலர் காணாமல் போயுள்ளதால் அவர்களை மிட்புப்படையினர் தேடிவருகின்றனர். கனமழையால் குவாதழு ஆற்றின் நீர்மட்டம் முக்கால்மணி நேரத்தில் 26 அடி உயரத்தை தாண்டியதாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
The post அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 24 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.