அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றார் டொனால்டு டிரம்ப்

5 months ago 16


வாஷிங்டன்: அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். டிரம்புக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்காவின் அதிபராக 2-வது முறையாக டிரம்ப் பதவியேற்றார். டிரம்ப் பதவியேற்ற பின்னர் பீரங்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. 78-வது வயதில் 2-வது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றார். வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடமான கேபிடல் அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. டிரம்ப் பதவியேற்புக்கு முன்னதாக அமெரிக்க துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பதவியேற்றுக் கொண்டார்

 

The post அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றார் டொனால்டு டிரம்ப் appeared first on Dinakaran.

Read Entire Article