அமெரிக்கா: பாலம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி; 4 பேர் காயம்

3 months ago 22

மிஸ்ஸிஸிப்பி,

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் சிம்சன் கவுன்டி பகுதியில் ஸ்டிராங் ஆற்றின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. இதனை இடித்து விட்டு, வேறு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் 18-ந்தேதி இந்த பாலம் மூடப்பட்டது. வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, பால இடிப்பு பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், 7 தொழிலாளர்கள் இந்த பால இடிப்பு பணியில் நேற்று ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பாலம் திடீரென இடிந்து விழுந்ததில், 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

பால இடிப்பு பணியின்போது சம்பவ பகுதியில் ஆய்வாளர் ஒருவர் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என மிஸ்ஸிஸிப்பி போக்குவரத்து துறை வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது. இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Read Entire Article