டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் கூறுகையில், இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்தது இதுவரை இல்லாத நடைமுறை. இது பல கேள்விகளை எழச் செய்கிறது. அதே போல அமைதி பேச்சுவார்த்தை எங்கு நடைபெறும் என்பதை முடிவு செய்ய அமெரிக்கா யார்? காஷ்மீர் பிரச்னையில் வெளிநாடுகளின் தலையீட்டை இந்தியா இதுவரை ஏற்றதில்லை. இப்போது, அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா ஏற்றுக்கொள்கிறதா?என்பதை மோடி அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
இந்திராவின் தைரியம்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், கடந்த 1971ல் வங்கதேச விடுதலை போரின்போது, இந்தியாவை மிரட்டுவதற்காக அமெரிக்கா அணு ஆயுதங்களை கொண்ட தனது போர் கப்பலை வங்கக் கடலில் நிறுத்தியது. ஆனால், அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அதற்கெல்wலாம் பயப்படவில்லை. இந்தியாவின் நலனுக்கு எது நல்லதோ அதை இந்திரா செய்தார். வங்கதேசம் பிறந்தது. இந்திரா காந்தியின் தைரியமான தலைமை இன்றைக்கு இந்தியாவில் இல்லை’ என்றார்.
The post அமெரிக்கா தலையீட்டை இந்தியா ஏற்கிறதா..? காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.