கேப் கெனவரல்: அமெரிக்காவின் நாசா விண்வௌி ஆய்வு மையம் நிலவில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக நாசா, பையர்பிளை ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து ப்ளூ கோஸ்ட்-1 என்ற விண்கலத்தையும், ஜப்பானின் ஐஸ்பேஸ் நிறுவனம் ஹகுடோ ஏர்மிஷன்-2 என்ற விண்கலத்தையும் கடந்த ஜனவரி 15ம் தேதி நிலவுக்கு அனுப்பின. அமெரிக்காவின் கென்னடி விண்வௌி ஆய்வு மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒரே ராக்கெட்டில் தனியாருக்கு சொந்தமான இரண்டு விண்கலங்கள் நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நிலவை சுற்றி வந்த ப்ளூ கோஸ்ட்-1 விண்கலம் திட்டமிட்டப்படி நேற்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. மேலும் நிலவில் இருந்து சில புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளது. ஜப்பானின் ஹகுடோ ஏர்மிஷன்-2 விண்கலம் மே அல்லது ஜூன் மாதத்தில் நிலவில் தரையிறங்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அமெரிக்க நிறுவனத்தின் ப்ளூ கோஸ்ட்-1 விண்கலம் நிலவில் கால்பதித்தது appeared first on Dinakaran.