
அய்வோ,
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள அய்வோ நகரில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு ஆயுஷ் ஷெட்டி (இந்தியா) மற்றும் பிரையன் யங் (கனடா) ஆகியோர் முன்னேறினர்.
இதன்படி நடைபெற்ற இறுதிப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆயூஷ் 21-18, 21-13 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.