வாஷிங்டன்: அமெரிக்கா இறக்குமதி செய்யும் அலுமினியம் மீதான வரியை 10லிருந்து 25% ஆக உயர்த்தி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப், பதவியேற்ற நாள் முதலே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அவரது வரி விதிப்பு நடவடிக்கைகள் உலக அரங்கில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருள்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார். மெக்சிகோவும் கனடாவும் புலம்பெயர்வு மற்றும் பெண்டனில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நடவடிக்கைத் தொடரும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் கனடாவும், மெக்சிகோவும் கடைசி நேரத்தில் டிரம்ப் கூறிய நடவடிக்கைகளுக்கு உத்தரவாதம் அளித்த நிலையில் வரி விதிப்பு ஒருமாத காலம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவில் இறக்குமதியாகும் எக்கு, அலுமினியம் போன்றவற்றுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். மெக்சிகோ, கனடாவில் இருந்து வரும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்போவதாகச் அறிவித்திருந்த டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு அந்த அறிவிப்பை நிறுத்தி வைத்தார். தற்போது இந்த புதிய வரிகளை அவர் அறிவித்திருக்கிறார். அதில், அமெரிக்க இறக்குமதி செய்யும் அலுமினியம் மீதான வரியை 10-லிருந்து 25%-ஆக உயர்த்தி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். சில நாடுகள் அமெரிக்காவுக்கு இறக்குமதி வரி இன்றி அலுமினியம், உருக்கு ஏற்றுமதி செய்ய அளிக்கப்பட்டிருந்த சலுகையும் ரத்து செய்யப்பட்டது. இறக்குமதி வரி அதிகரிப்பால் அமெரிக்கா மீண்டும் பணக்கார நாடாக உருவெடுக்கும் என்றும் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அலுமினியம், உருக்கு வரி விதித்தன்மூலம், உலோக உற்பத்தி தொழிற்சாலைகள் மீண்டும் அமெரிக்காவில் வளரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார் .
The post அமெரிக்க இறக்குமதி செய்யும் அலுமினியம் மீதான வரியை 10-லிருந்து 25%-ஆக உயர்த்தி அதிபர் டிரம்ப் உத்தரவு..!! appeared first on Dinakaran.