அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 3 நாட்களே உள்ளதால் தீவிர பரப்புரை: கமலா ஹாரிஸ், டொனால்டு டிரம்ப் சூறாவளிப் பிரச்சாரம்

2 weeks ago 5

 

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அதிபர் வேட்பாளர்களான கமலா ஹாரிஸ், டொனால்டு டிரம்ப் ஆகியோர் மாகாணம் தோறும் பயணித்து சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் கமலா ஹாரிஸும், டொனால்டு டிரம்ப் தொடர்ந்து சம பலத்தில் இருப்பதால் தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக மாறும் என்று உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனால் தங்கள் ஆதரவு விழுக்காட்டினை அதிகரிக்கும் விதமாக கடைசி கட்ட சூறாவளி பரப்புரையில் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய வேட்பாளர்கள் பாணியில் டிரம்ப் பர்கர், உருளை சிப்ஸ் தயாரித்தும், குப்பை லாரி ஓட்டியும் வாக்கு சேகரித்தார். இதனிடையே அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால் உலகம் முழுவதும் இந்துக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது சமூக வலைத்தளத்தில் புதிய உறுதிமொழி அளித்துள்ளார் டொனால்டு டிரம்ப்.

இந்நிலையில், அரிசோனா மாகாணத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய துணை அதிபர் கமலா ஹாரிஸ், டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனால் ஒபாமாகோர் உட்பட பல்வேறு சுகாதார காப்பீடு திட்டங்கள், மகளிர் மற்றும் மகளிர் நலத்திட்டங்களையும் ரத்து செய்து விடுவார் என்று எச்சரித்தார். இதனிடையே நிவானா மாகாணத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய குடியரசி கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப் ஜோ பைடன் ஆட்சி அமெரிக்காவின் சட்டவிரோத குடியேற்றம் அதிகரித்து விட்டதாக குற்றம் சாட்டினார். இதே நிலை நீடித்தால் அமெரிக்கா ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட நாடக உருமாறும் என்றும் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார்.

The post அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 3 நாட்களே உள்ளதால் தீவிர பரப்புரை: கமலா ஹாரிஸ், டொனால்டு டிரம்ப் சூறாவளிப் பிரச்சாரம் appeared first on Dinakaran.

Read Entire Article