அமித்ஷாவுக்கு எதிராக உயர் நீதிமன்ற வக்கீல்கள் போராட்டம்

1 month ago 6

சென்னை: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் கருத்து தெரிவித்தார். இதற்கு அனைத்து எதிர்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அமித்ஷாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட வழக்கறிஞர் அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் \\”அம்பேத்கர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோஷம் எழுப்பப்பட்டது. இதனால் உயர் நீதிமன்றம் எதிரே என்.எஸ்.சி போஸ் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

The post அமித்ஷாவுக்கு எதிராக உயர் நீதிமன்ற வக்கீல்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article