சென்னை,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை மறுநாள் (27-ந்தேதி) சென்னை வர உள்ளதாகவும் தமிழகத்தில்நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது .
இந்த நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷாவின் தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .ஜனவரி முதல் வாரத்தில் அமித்ஷா தமிழகத்திற்கு வருவார் என்று பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.