சென்னை: மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாநில செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் கூட்டாக இணைந்து நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அண்மையில் ராஜ்ய சபாவில், அரசியல் சாசன சட்டத்தின் 75ம் ஆண்டு விழா கொண்டாட்டம் மீதான விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதிக்கும் வகையிலும், இழிவு செய்யும் வகையில் பேசியதற்கு எதிராக எல்லாத் தரப்பினரும் தன்னெழுச்சியுடன் போராடி வருகின்றனர். இடதுசாரி கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது.
இந்நிலையில், அகில இந்திய அறைகூவல் என்கிற அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கோவை, சேலம், தூத்துக்குடி, ஈரோடு ஆகிய 10 மாநகரங்களில் இடதுசாரி கட்சிகளின் சார்பில், அமித்ஷாவின் ராஜினாமாவை வலியுறுத்தி வரும் 30ம் தேதி அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக சக்திகளும், பொதுமக்களுக்கும் பேராதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் வரும் 30ம் தேதி ஆர்ப்பாட்டம்: இடதுசாரி கட்சிகள் அறிவிப்பு appeared first on Dinakaran.