அமித்ஷா மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி வாசகம் திடீர் நீக்கம்

1 week ago 4

சென்னை,

தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. காய்களை நகர்த்தி வருகிறது. அந்த வகையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் இப்போதே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை? என்பதை முடிவு செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்துள்ளார்.

மதியம் 12 மணி அளவில் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியை அறிவிக்க இருப்பதாக கூறப்பட்டது. கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற உள்ள இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் 7 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மேடைக்கு பின்னால் உள்ள எலக்ட்ரானிக் திரையில், தேசிய ஜனநாயக கூட்டணி என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கவில்லை. துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இல்லத்துக்கு சென்ற மத்திய மந்திரி அமித்ஷா அவருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையே, தேசிய ஜனநாயக கூட்டணி என்றால், சட்டசபை தேர்தலில் இந்தக் கூட்டணிக்கு அ.தி.மு.க. தலைமை தாங்காதா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், மதியம் 1 மணி அளவில், அந்த டிஜிட்டல் திரையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி என்ற ஆங்கில வார்த்தை மாற்றப்பட்டு, வேறு டிசைன் வைக்கப்பட்டது. இதனால், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்களா?, அறிவித்தபடி தேசிய ஜனநாயக கூட்டணி அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Read Entire Article