அமலாக்கத்துறை என்ற பெயரை கேட்டாலே திமுகவில் யாருக்கும் தூக்கம் வருவதில்லை: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

3 hours ago 3

சென்னை: அமலாக்கத் துறை என்ற வார்த்தையை கேட்டாலே திமுகவில் யாருக்கும் தூக்கம் வருவதில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழக பாஜக ஊடகப்பிரிவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் வரிவிதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கிராமபுறப் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்திருப்பதால் கிராமங்களுக்கிடையே மோதல்கள், மாணவர்களுக்கிடையே தகராறு சம்பவங்கள் அதிகம் நிகழ்கின்றன. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்தாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

Read Entire Article