“அமலாக்கத் துறை சோதனை எப்படி திசை திருப்புதல் ஆகும்?” - அண்ணாமலை கேள்வி

1 week ago 4

கோவை: “தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து சரியான நேரத்தில் பேசுவோம். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை நடவடிக்கை எப்படி திருப்புதல் ஆகும்?” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 7) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அரக்கோனத்தில் நடந்த சிஐஎஸ்எஃப் மண்டல பயிற்சி மையத்துக்கு ராஜா ஆதித்யா சோழன் மண்டல பயிற்சி மையம் என பெயர் சூட்டியுள்ளார். இதற்காக மத்திய அரசுக்கு பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

Read Entire Article